முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண் குத்திக் கொலை: இளைஞர் கைது

சேலத்தில் சொத்துத் தகராறு காரணமாக பெண்ணைக் குத்திக் கொலை செய்ததாக இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On : 17 செப்டம்பர், 2013 at 11:08 PM
பகிர்:

சேலத்தில் சொத்துத் தகராறு காரணமாக பெண்ணைக் குத்திக் கொலை செய்ததாக இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

 சேலம் முள்ளுவாடி கேட், சுப்பாராவ் தெருவைச் சேர்ந்தவர் இனாயத்துல்லா. இவரது மனைவி சஹானாஸ் (45). இவர்களது மகன் ரிஸ்வான் (20). இனாயத்துல்லா 4 ரோடு பகுதியில் உள்ள செருப்புக் கடையிலும், ரிஸ்வான் காந்தி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர்.

 இந்த நிலையில் ரிஸ்வான், திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, சஹானாஸ் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சஹானாûஸ பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

 இது குறித்து சேலம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் சஹானாஸின் உறவினர் இலியாஸ் (29) என்பவரே இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

 விசாரணையில் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள இனாயத்துல்லாவின் குடும்ப சொத்தான சுமார் 2 ஆயிரம் சதுர அடி நிலத்துக்காக இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு வந்ததும், இது தொடர்பாகவே வீட்டில் தனியாக இருந்த சஹானாûஸ இலியாஸ் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.