சிதம்பரத்தில் செப்.21ல் அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பு பொதுக்குழுக்கூட்டம்
இதுகுறித்து கூட்டமைப்பு மாநிலத் தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டத்தில்
தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டம் வருகிற செப்.21-ம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பு மாநிலத் தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றம், ஆளவை மன்றம் ஆகியவற்றில் பிரநிதித்துவம் கோரியும், மாநில நாடு நடத்துவது குறித்தும் தீர்மானங்கள் மர்றும் கோரிக்கைகள் பற்றிய முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளது என சி.மதியழகன் தெரிவித்துள்ளார்.