முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு

கடலூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் புனிதவதி தலைமையிலான அலுவலர்கள் சிதம்பரம், புவனகிரி பகுதியில் பல்வேறு நிறுவனங்களில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். சிதம்பரம் நகரில் வெல்டிங்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:44 PM
பகிர்:

சிதம்பரம் அருகே குழந்தை தொழிலாளர்கள் இருவரை தொழிலாளர் நலத்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடலூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் புனிதவதி தலைமையிலான அலுவலர்கள் சிதம்பரம், புவனகிரி பகுதியில் பல்வேறு நிறுவனங்களில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். சிதம்பரம் நகரில் வெல்டிங் ஒர்க்க்ஷாப்பில் பணியாற்றிய சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (13), புவனகிரி பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடையில் பணியாற்றிய சிதம்பரத்தைச் சேர்ந்த செல்லதுரை (13) ஆகிய இரு சிறுவர்களை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அச்சிறுவர்களை படிக்க வைக்குமாறு அறிவுறுத்தினர். மேலும் குழந்தை தொழிலாளராக வேலைக்கு வைத்துக் கொண்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் நல ஆய்வாளர் புனிதவதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.