ப.சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு செப்.22-ல் புவனகிரியில் மாரத்தான் ஓட்டம்!
மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி மற்றும் புவனகிரி தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் 4-ம் ஆண்டு மாரத்தான் ஓட்டம் செப்.22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

புவனகிரி ராஜீவ்காந்தி சிலையிலிருந்து காலை 6.10 மணி்க்கு ஓட்டம் தொடங்கி சிதம்பரம் புறவழிச்சாலை வரை சென்று மீண்டும் புவனகிரியை வந்தடைகிறது. ஆண்களுக்கான ஓட்டம் 8 கி.மீட்டர் தூரமும், பெண்களுக்கான ஓட்டம் 4 கி.மீட்டர் தூரமும் நடைபெறுகிறது. மாரத்தான் ஓட்டத்திற்கு க.செளந்தரபாண்சியன் தலைமை வகிக்கிறார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார். புவனகிரி முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கோவி.பழனிசாமி வாழ்த்துரையாற்றுகிறார். பி.வி.சம்பத் நன்றி கூறுகிறார். மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2ஆயிரம், நான்காம் பரிசு ரூ.ஆயிரம், ஐந்தாம் பரிசு ரூ.500-ம் வழங்கப்படுகிறது.