பெண்ணிடம் நூதன முறையில் பணத்தை திருடிய இளைஞர் கைது
சிதம்பரம் அருகே கிள்ளை செல்லும் சாலையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த கள்ளக்குறிச்சி
சிதம்பரம் அருகே கிள்ளையில் பெண்ணிடம் நூதன முறையில் பணத்தை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே கிள்ளை செல்லும் சாலையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்தலி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி (33) என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர் கடந்த மாதம் கிள்ளை பில்லுமேட்டைச் சேர்ந்த செல்வராணி (34) என்ற பெண்ணிடம் ரூபாய் நோட்டை கீழே போட்டு அவரது ரூ.45ஆயிரம் ரொக்கத்துடனான பையை நூதன பறித்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பழனிசாமியிடமிருந்து ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து பழனிசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.