ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற வாகன சோதனையின் போது காரில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த இருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான
தற்போதைய செய்திகள்ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற வாகன சோதனையின் போது காரில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த இருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற வாகன சோதனையின் போது காரில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த இருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகளை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தி்ல் சிப்காட் போலீஸார் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா ராபர்ட் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கார் ஒன்று போலீஸாரை பார்த்ததும் சற்று தூரத்தில் நின்றது. தொடர்ந்து காரை ஓட்டி வந்தவர் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார்.இதை கண்ட போலீஸார் அவரை துரத்தி மடக்கி பிடித்தனர். தொடர்ந்து காரை சோதனை செய்ததில் காரில் சுமார் 600 கிலோவிலான 16 செம்மரத்துண்டுகளை பதுக்கி கடத்த இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீஸார் காரை ஓட்டி வந்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த மணி மகன் ரமேஷ்(23)என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.