முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 30,729 பேருக்கு பட்டமளிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான கே.ரோசய்யா தலைமை

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரத்து 729 மாணவர்-மாணவிகளுக்கு திங்கள்கிழமை பட்டங்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான கே.ரோசய்யா தலைமை வகித்தார். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் வாழ்த்திப் பேசினார். மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆலோசகர் பி.ஆர்.சுப்பிரமணியன், பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.இப் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்த ஆண்டில் 133 மாணவர்கள், 156 மாணவிகள் உள்பட 289 பேர் முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். 1395 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 9 ஆயிரத்து 256 பேர் முதுநிலை பட்டமும், 19 ஆயிரத்து 789 பேர் இளநிலை பட்டமும் என மொத்தம் 30 ஆயிரத்து 729 பேர் பட்டங்கள் பெற்றுள்ளனர். இவர்களில் 421 பேருக்கு விழா மேடையில் பட்டங்களை, ஆளுநர் கே.ரோசய்யா வழங்கி பாராட்டினார்.

அம்பாசமுத்திரம் அரசு கலைக்கல்லூரி மாணவர் முத்துசுப்பிரமணியன், திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவி சி.சிவசங்கரி, நாகர்கோவில் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி மாணவி எம்.எல்.சினி, காயல்பட்டினம் வாவு வஹிதா கல்லூரி மாணவி எஸ்.வி.அகமதுகலிமா ஆகியோர் 2 பதக்கங்கள் பெற்றனர்.

இவ் விழாவில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி, டி.ஐ.ஜி. சுமித்சரண், மாநகர காவல் துணை ஆணையர் ராஜராஜன், உதவி ஆணையர் லோகநாதன்,  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தி.தமிழ்ச்செல்வம், தேர்வாணையர் எஸ்.பிரபாகரன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பெ.கோவிந்தராஜ், நிதி அதிகாரி எல்.முத்துப்பாண்டி, மரியம்ஜான், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் ஆர்.முருகையாபாண்டியன், திருநெல்வேலி மேயர் விஜிலாசத்தியானந்த்,  கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் சுதா கே.பரமசிவம், பரணி சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →