முதல்வரின் துணிச்சலான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாராட்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது தமிழக முதல்வரின் துணிச்சலான நடவடிக்கையாகும். வேறு யார் முதல்வராக இருந்தாலும்
அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது தமிழக முதல்வரின் துணிச்சலான நடவடிக்கையாகும். வேறு யார் முதல்வராக இருந்தாலும் இச்செயலை செய்திருக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ புதன்கிழமை செய்தியாளர்களிடையே தெரிவித்தது:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிதிமுறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்று வந்தது. இதக்கு ஆசிரியர்கள்- ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வந்தன. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர், ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை அனுப்பிவைத்து ஆய்வு செய்து முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதி செய்து பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். பின்னர் ஷீவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக நிர்வாகியாக நியமித்து பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
பின்னர் சட்டப்பேரவையில் பல்கலைக்கழக சட்டத்தை திருத்தி அமைக்க தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதலுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தார். தற்போது சட்டதிருத்த மசோதவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதுள்ள முதல்வரை தவிர வேறு யாராக இருந்தாலும், இந்த துணிச்சலான செயலை செய்து இருக்க முடியாது. இச்செயலுக்கு முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன். தமிழக முதல்வர் எதிர்காலத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி நடவடிக்கை மேற்கொண்டு புதிய சிண்டிகேட் உறுப்பினர்களை தேர்வு செய்யவேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.