மதுரையில் அதிமுக பிரமுகர் கொலை : நீதிமன்றத்தில் 5 பேர் சரண்
மதுரையில் அதிமுக 72வது வார்டு மேலவை உறுப்பினராக இருந்த மயில் முருகன் (43) கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிவகங்கை நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்துள்ளனர்.
மதுரையில் அதிமுக 72வது வார்டு மேலவை உறுப்பினராக இருந்த மயில் முருகன் (43) கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிவகங்கை நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்துள்ளனர்.
மதுரை தெப்பக்குளம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த மயில்முருகன் புதன்கிழமை காலை படுகொலை செய்யப்பட்டார். இவர் அதிமுக 72-வது வார்டு மேலவை உறுப்பினராகவும், கூட்டுறவு சங்க இயக்குநராகவும் இருந்து வந்தார்.
இவர் புதன்கிழமை காலையில் வீட்டிலிருந்து, அருகிலுள்ள தனது அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த 8 பேர் கும்பல் அரிவாள், பட்டாக் கத்தியுடன் அவரை தாக்கினர். மயில் முருகன் தப்பியோடிய போதும், அவரை துரத்திச் சென்று, வெட்டிக் கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
Advertisement
இது தொடர்பாக சிவகங்கை நீதித்துறை இரண்டாவது நடுவர் மன்றத்தில் மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், மாடுமுணி என்கிற மணிகண்டன், முத்துராமலிங்கம் என்கிற காட்டுராஜா, மாதவன், சடையாண்டி என்கிற செகுட்டு சடையாண்டி ஆகிய 5 பேர் நீதிபதி வெங்கடேபெருமாள் முன்னிலையில் சரண் அடைந்தனர்.