முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண்ணை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கிய வழக்கில் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Updated On : 30 செப்டம்பர், 2013 at 10:34 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கிய வழக்கில் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்து. இவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கேலி செய்தாராம். இதனை  அழகிரி மகன் முருகன் (38) என்பவர் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டிருந்த முருகனை, முத்து, லிங்கம் மகன் வெங்கட்ராமன், நெரிஞ்சி மகன் செல்வம் ஆகியோர் வழி மறித்து கம்பால் தாக்கி கடித்துள்ளனர். இதில் காயமுற்ற முருகன் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடி வருகிறார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.