முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆலங்குடி அருகே ரூ.26.75 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி  சட்டப்பேரவைத் தொகுதிக்கான எஸ். தமிழ்ச்செல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:55 AM
பகிர்:

ஆலங்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வாகனச்சோதனையில் ரூ.26.75 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி  சட்டப்பேரவைத் தொகுதிக்கான எஸ். தமிழ்ச்செல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையல் குரும்பூர் சர்க்கரை ஆலை அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அவ்வழியாக அறந்தாங்கி நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை நிறுத்தி சோதித்தபோது. அதில், வெட்டன்விடுதியை  அருகேயுள்ள நைனான்கொல்லையைச் சேர்ந்த தினகரன் மகன் விஜயராகவன்(27)  துணிப்பையில் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 26.75 லட்சத்தை  பறிமுதல் செய்து ஆலங்குடி வட்டாட்சியர் நாகராஜன் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு சார்கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் மெய்யப்பன் என்பவர் விஜயராகவன் மூலம் அறந்தாங்கியைச் சேர்ந்த சிலரிடம் கொடுப்பதற்காக இந்தத் தொகை கொடுத்து அனுப்பியது தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →