முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக ஆட்சியில் மின்சாரம், குடிநீர் கிடையாது: கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்சாரம், குடிநீர் கிடையாது என திமுவைச் சேர்ந்த கனிமொழி எம்பி குற்றம் சாட்டினார். சிதம்பரம் அருகே புவனகிரியில் கூட்டணி கட்சி வேட்பாளரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து, கனிமொழி எம்.பி., வேன் மூலம் பிரசாரம் செய்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:57 AM
பகிர்:

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்சாரம், குடிநீர் கிடையாது என திமுவைச் சேர்ந்த கனிமொழி எம்பி குற்றம் சாட்டினார்.

சிதம்பரம் அருகே புவனகிரியில் கூட்டணி கட்சி வேட்பாளரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து, கனிமொழி எம்.பி., வேன் மூலம் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது:

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடையாது. தொழில்வளர்ச்சி கிடையாது. குடிநீர் கிடையாது.  கருணாநிதி ஆட்சியில் விவசாயிகள் பெற்ற கடன் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடையாது. இப்படிப்பட்ட ஆட்சி தேவைதானா? என சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மக்களுக்கு எந்த வகையான வழிவகையும் இந்த ஆட்சி செய்யவில்லை. இப்படிப்பட்டை ஆட்சி தொடர வேண்டும் என சிந்தித்து பார்க்க வேண்டும். அந்த ஆட்சி தொடரக்கூடாது என்றால், சம்மட்டி அடியாக இந்த தேர்தலில் திமுக கூட்டணியை 40 தொகுதிகளில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அப்படிப்பட்ட நிலை உருவானால்தான், அடுத்து நாம் ஆட்சி பொறுப்பிற்கு வந்து, இவர்கள் பாழ்படுத்தியுள்ள தமிழகத்தை மீண்டும் நல்ல முறையில் உருவாக்கி, மக்கள் வாழ்க்கையில் ஒரு ஒளியை, தன்மானத்தை, சுயமரியாதையை நிலைநாட்ட முடியும் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.