முகப்பு
தற்போதைய செய்திகள்

தேசிய தலித் விடுதலை இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு

தேசிய தலித் விடுதலை இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கரூரில் இவ்வியக்கம் சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 9 ஏப்ரல், 2014 at 1:35 PM
பகிர்:

தேசிய தலித் விடுதலை இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கரூரில் இவ்வியக்கம் சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரகமந்திரத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவுக்கு ஆதரவுகொடுப்பது, வரும் 13-ம்தேதி கரூரில் நடக்க உள்ள ஜெயலலிதாவின் பிரசார பொதுக்கூட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்தும் 3000 பேர் கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கூட்டத்துக்கு இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வி.பிரேமா தலைமை வகித்தார்.நகர செயலாளர் சிராஜூதீன் முன்னிலை வகித்தார். தேசிய அமைப்பாளர் தலித் பாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.