முகப்பு
தற்போதைய செய்திகள்

வீண் ஆரவாரம், வெற்றியை தராது: விடுதலைச் சிறுத்தைகளுக்கு கருணாநிதி அட்வைஸ்

சிதம்பரத்தில் வியாழக்கிழமை திருமாவளவனை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி பேசிய பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் முண்டியடித்துக் கொண்டு மேடை முன்பு வந்து ஆரவாரம் செய்தனர். கூச்சல் போட்டனர். இதனால் பேச்சு தடைபட்ட கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகளை பார்த்து ஆரவாரம் செய்யாதீர்கள், காரியம்தன் பெரியது என விடுதலைச் சிறுத்தைகளுக்கு அட்வைஸ் செய்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

சிதம்பரத்தில் வியாழக்கிழமை திருமாவளவனை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி பேசிய பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் முண்டியடித்துக் கொண்டு மேடை முன்பு வந்து ஆரவாரம் செய்தனர். கூச்சல் போட்டனர். இதனால் பேச்சு தடைபட்ட கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகளை பார்த்து ஆரவாரம் செய்யாதீர்கள், காரியம்தன் பெரியது என விடுதலைச் சிறுத்தைகளுக்கு அட்வைஸ் செய்தார்.

 சிதம்பரத்தில் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவனை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி பேசியது:

நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால்,  வீன் ஆரவாரம், வெற்றியை தராது. நான் பேசும்போதெல்லாம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று சொன்னால், ஒருதலையாக ஆரவாரம் செய்கிறீர்கள். வேண்டுமென்றால் நானும் உங்களோடு சேர்ந்து கொண்டு, நீங்கள் ஆரவாரம் செய்தால் நானும் ஆரவாரம் செய்ய தயாராக இருக்கிறேன்.

இளம்வயதிலேயே உங்களை போல் இருந்தபோது இப்படியெல்லாம் ஆரவாரம் செய்தவன்தான். ஆனால் நமக்கு காரியம் பெரியது. அந்த காரியத்தை நிறைவேற்ற வேண்டும். அதுதான் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை வெற்றி பெறச்செய்ய வேண்டியது.

அந்த வெற்றியை நீங்கள் ஈட்டித்தந்தால், இங்கே நடக்கின்ற ஆர்ப்பாட்டத்தை, ஆரவாரத்தை, முழக்கத்தை இவையல்லாம் மீறி நீங்கள் அந்த வெற்றியை எடுத்து தருவீர்கனேயானால், என்னை போல் மகிழ்ச்சியடைபவன் யாராகவும் இருக்க முடியாது என கருணாநிதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.