முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பாத்திரங்கள் பறிமுதல்!

புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை அலுவலரும், புள்ளியியல்துறை ஆய்வாளருமான ஆர்.சிவக்குமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:59 AM
பகிர்:

சிதம்பரம் அருகே போதிய ஆவனங்கள் இன்றி மினிடோர் லாரியில் கொண்டு வந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பாத்திரங்களை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை அலுவலரும், புள்ளியியல்துறை ஆய்வாளருமான ஆர்.சிவக்குமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை சேத்தியாத்தோப்பு- வடலூர் இடையே பின்னலூர் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினிடோர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் போதிய ஆவனங்கள் இன்றி சாதம் வடிக்க பயன்படுத்தும் பாத்திரமான நூற்றுக்கும் மேற்பட்ட அன்னக்கூடைகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் பறக்கும்படையினர் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பாத்திரங்கள் மற்றும் மினிடோர் லாரியை பறிமுதல் செய்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.