முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்லூரி நிர்வாகத் தலைவரை பட்டபகலில் கொல்ல முயற்சி

தேனியில் செவ்வாய்கிழமை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத் தலைவர் வழிமறித்து தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்

Updated On : 15 ஏப்ரல், 2014 at 7:32 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:30 AM

தேனியில் செவ்வாய்கிழமை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத் தலைவர் வழிமறித்து தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத்நிகேதன் பொறியியல் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் மோகன்(56). இவர், தேனி என்.ஆர்.டி.நகரில் வசித்து வருகிறார். என்.ஆர்.டி.நகரில் இருந்து கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்த மோகனை, தேனி சிவாஜிநகர் பகுதியில் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் வழிமறித்துள்ளனர். இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய ஒருவர், காரின் கதவை தட்டி திறக்குமாறு கூறியுள்ளார். காரில் இருந்த மோகன் கதவின் கண்ணாடியை கீழ இறங்கியதும், இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர், அவரை முகத்தில் இரண்டு முறை தாக்கியதாக கூறப்படுகிறது.

      இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த கார் விற்பனை ஏஜென்ஸி பணியாளர் சத்தியன்(35), இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபரை ஓடிச் சென்று பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில், சத்தியனை கத்தியால் நெஞ்சில் கீறி காயப்படுத்திவிட்டு, இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனராம்.

Advertisement

   இது குறித்து மோகன் அளித்த புகாரின் மீது தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.