முகப்பு
தற்போதைய செய்திகள்

தென்காசி தொகுதி சுயேட்சை வேட்பாளர் மீது பயங்கர தாக்குதல்: 15 பேர் மீது வழக்கு

வியாழக்கிழமை பகல் மதுரையிலிருந்து தென்காசிக்கு பிரச்சாரத்திற்காக ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். பகல் 11 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி. தேவலாய சந்திப்பில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

தற்போதைய செய்திகள்

தென்காசி தொகுதி சுயேட்சை வேட்பாளர் மீது பயங்கர தாக்குதல்: 15 பேர் மீது வழக்கு

வியாழக்கிழமை பகல் மதுரையிலிருந்து தென்காசிக்கு பிரச்சாரத்திற்காக ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். பகல் 11 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி. தேவலாய சந்திப்பில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:02 AM
பகிர்:

தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை 15 பேர் கொண்ட கும்பல் தாக்கிய காயப்படுத்தியது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சுயேட்சையாக மதுரை, சர்வேயர் காலனி, யமுனா தெருவைச் சேர்ந்த எஸ்.ராதாகிருஷ்ணன் என்பவர் போட்டியிடுகிறார்.

வியாழக்கிழமை பகல் மதுரையிலிருந்து தென்காசிக்கு பிரச்சாரத்திற்காக ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். பகல் 11 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி. தேவலாய சந்திப்பில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், ராதாகிருஷ்ணனை ஆபாசமா திட்டி, கிருஷ்ணசாமிக்கு எதிராக போட்டியிடக் கூடாது என்று கூறி மிரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினார்களாம். இதில் ராதாகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். மேலும் பணம் ரூ.47 ஆயிரத்தை எடுத்துக் கொண்டதுடன், வாகனத்திலிருந்து பொருட்களையும் எடு்த்துச் சென்று விட்டார்களாம்.

இது குறித்து ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தூண்டுதலின் பேரில் 15 பேர் கொண்ட கும்பல் தன்னைத் தாக்கி பணம், பொருட்களை எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். காவல் சார்பு ஆய்வாளர் ஹென்றி அமலதாஸ் வழக்குப் பதிவு செய்துள்ளார். ஆய்வாளர் சுந்தரபாண்டியன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சுயேட்சை வேட்பாளர் மீது வழக்கு:

ராஜபாளையம் தாலுகா, முதுகுடியைச் சேர்ந்த க.ராஜலிங்கம் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர்  நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின் பேரில் சுயேட்சை வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராஜலிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளராக உள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராதாகிருஷ்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் சிறைச்சாலை அருகே வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதாக அறிந்து  சென்றுள்ளார். ராதாகிருஷ்ணன் அனுமதியின்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததுடன், டாக்டர் கிருஷ்ணசாமி குறித்து தனி நபர் விமர்சனம் செய்து துண்டுப் பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்தாராம். இதனை ராஜலிங்கம் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு ராஜலிங்கத்தை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் காரை ஏற்றி கொலை செய்ய முயன்றார்களாம். இது குறித்து ராஜலிங்கம் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் திலகராணி, வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் இரு கார் ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →