முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.59 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.59 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.59 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.59 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:02 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.59 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கு அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் குமரேசன், உஸ்மான் அலி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தினர்.

அதில் ரூ.53 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணம் இருந்தது. இப் பணம் ராஜபாளையம் பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து எடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ஏ.டி.எம். களில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது என வாகனத்தில் வந்தவர்கள் கூறினர். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் கொண்டுவந்து, பின்னர் துணை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணன்கோவில் அருகே பறக்கும்படை அலுவலர் பாபுசந்திரபிரகாஷ் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.6 லட்சம் இருந்துள்ளது. விசாரணையில் டிரைவர் ராஜாராம், ஏ.டி.எம். இயந்திரங்களில் வைப்பதற்கான பணம் என்று கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்று பின், துணை கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →