மத்திய ஆட்சியில் 16வருடம் அங்கம் வகித்த திமுக தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை: தா.பாண்டியன்
மத்திய ஆட்சியில் 16வருடம் அங்கம் வகித்த திமுக காவிரி உள்ளிட்ட தமிழக பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மீஞ்சூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்திய
தற்போதைய செய்திகள்மத்திய ஆட்சியில் 16வருடம் அங்கம் வகித்த திமுக தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை: தா.பாண்டியன்
மத்திய ஆட்சியில் 16வருடம் அங்கம் வகித்த திமுக காவிரி உள்ளிட்ட தமிழக பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மீஞ்சூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்திய
மத்திய ஆட்சியில் 16வருடம் அங்கம் வகித்த திமுக காவிரி உள்ளிட்ட தமிழக பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மீஞ்சூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் குற்றம் சாட்டினர்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியிஸ் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ.எஸ். கண்ணனை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டம் மீஞ்சூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக்குழு தலைமை உறுப்பினர் கதிர்வேல் தலைமை வகித்தார். மீஞ்சூர் ஒன்றிய செயலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசியதாவது:
1967-முதல் இரண்டு திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தும் இதுவரை தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளதா மத்திய அரசில் அங்கம் வகிக்க தனக்கு தேவையான துறைகளை ஒதுக்க பேரம் பேசிய கருணாநிதி தமிழகத்தின் நீண்ட நாள் பிரச்னையை தீர்க்கும் வகையில் நீர்வளத்துறை அமைச்சர் பதவியை கேட்டு பெறாதது ஏன் நடிகர் விஜயகாந்த மேடையில் ஏறும்போது ஒன்றை பேசுகிறார். இறங்கும் போது வேறொன்று பேசுகிறார். ஜெயலலிதா மீது இருந்த நம்பத்தன்மையை அவர் இழந்து விட்டார். கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரை எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க, நதிகளை இணைக்க நீங்கள் கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இடசாரி அமைப்புகள் வெற்றி பெற்றால் உழைக்கும் மக்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம் என தெரிவித்தார்.