முகப்பு
தற்போதைய செய்திகள்

சுதந்திர இந்தியா இதுபோன்ற மோசமான நிலையை சந்தித்ததில்லை: ஜெயலலிதா பிரசாரம்

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தென்சென்னை தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:03 AM
பகிர்:

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தென்சென்னை தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது குஜராத்தை விட தமிழகம் சிறந்த மாநிலம் என்று புள்ளிவிபரத்துடன் கூறினார். அவர் கூறியதாவது:

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை அதிமுக அரசு தீர்த்துவைத்துள்ளது.  178 தேர்தல் வாக்குறுதிகளில் 150-ஐ அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது  குஜராத் வளர்ந்த மாநிலம் என்று கூறுவது தவறு. இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடியல்ல. குஜராத்தைவிட தமிழகம் வளர்ந்த மாநிலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தமிழர் விரோதப்போக்குடன் செயல்பட்ட காங்கிரஸ் அரசில் திமுக அங்கம் வகித்தது. திமுக காங்கிரசுக்கு ஆதரவான போக்கைக் கொண்டிருப்பதால் கார் இறக்குமதி வழக்கிற்காக காங்கிரசை திமுக விமர்சனம் செய்யவில்லை. திமுக ஆதரவு தேவைப்படும் என காங்கிரசும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை கார் இறக்குமதி குறித்து கருணாநதியும் ஸ்டாலினும் பதிலளிக்க வேண்டும்

முழு கட்டுரையைப் படிக்க →