முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக, திமுக வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும்: தா. பாண்டியன்

ஆளும் கட்சியான அதிமுக, பணம் படைத்த திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன். நாகையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

ஆளும் கட்சியான அதிமுக, பணம் படைத்த திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன். நாகையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :

ஆளும் கட்சியான அதிமுகவும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. இதைத் தடுக்க முயலும், இடதுசாரி தொண்டர்கள் தாக்கப்படுவதும், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் செயலும் நடைபெறுகிறது.

தேர்தல் விதி மீறல்களைத் தடுக்க வேண்டிய காவல் துறை, அதிமுக அரசின் துணைப் படை போல செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. இது குறித்து தேர்தல் ஆணையம் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார் தா. பாண்டியன்.

முழு கட்டுரையைப் படிக்க →