வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தஅதிமுகவினர் 4 பேர் கைது: ரூ.98,000 பறிமுதல்
கரூர் ஐந்து ரோடு கருப்பாயிகோவில் தெருவில் திங்கள்கிழமை நள்ளிரவில் 1.25 மணியளவில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் தேர்தல் பார்வையாளர் சஞ்சய்சர்மாவுக்கு ரகசிய தகவல்
கரூரில் வாக்காளர்களுக்கு திங்கள்கிழமை நள்ளிரவில் பணம் கொடுத்த அதிமுகவினர் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணம் ரூ.98ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
கரூர் ஐந்து ரோடு கருப்பாயிகோவில் தெருவில் திங்கள்கிழமை நள்ளிரவில் 1.25 மணியளவில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் தேர்தல் பார்வையாளர் சஞ்சய்சர்மாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜோஷிநிர்மல் குமாருக்கு தெரிவித்தார். உடனே அவர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்து கரூர் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களை கைது செய்து விசாரித்தபோது அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 24வது வார்டு செயலாளர் மோகன்,கிருஷ்ணன், ரமேஷ், அரவிந்தன், நாராயணன் ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ரூ.98,000 பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Advertisement