மதுராந்தகம் அருகே வாகன சோதனையில் 768 மதுபாட்டில்களுடன் மோட்டார் சைக்கிள் பறிமுதல்
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகம் உட்கோட்டப்பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன் உத்திரவின்படி, சித்தாமூர் போலீஸார் செவ்வாய்கிழமை இரவு வாகன தணிக்கை
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகம் உட்கோட்டப்பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன் உத்திரவின்படி, சித்தாமூர் போலீஸார் செவ்வாய்கிழமை இரவு வாகன தணிக்கை செய்யும்போது, மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன் உத்திரவின்படி, பாராளுமன்றத்தேர்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமை அன்று, பல்வேறு இடங்களில் போலீஸார் வாகன சோதனை, மர்மமான இடங்களை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை செய்தனர். சித்தாமூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீஸார் செவ்வாய்கிழமை இரவு மதுராந்தகம் அடுத்த ஜமீன்எண்டத்தூர் அருகே வாகன தணிக்கை செய்யும்போது, மோட்டார் சைக்கிளில் சந்தேகம்படும்படியாக ஜமீன்எண்டத்தூர் சின்னதுரை மகன் செந்தில் (23), அணணாநகர் வேதாசலம் மகன் ஏழுமலை (34) ஆகிய 2 நபர்கள் வேகமாக வந்தனர்.
அப்போது போலீஸார் அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளை சோதனை செய்தபோது 180 மில்லி கொண்ட 384 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர். அவர்களை விசாரித்ததில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 324 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர். மொததமாக 768 மதுபாட்டில்களையும், மதுபாட்டில்களை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்யும் கைப்பற்றினார்கள்.
Advertisement
இது குறித்து சித்தாமூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.