முகப்பு
தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை 72 சதவீதம் வாக்குகள் பதிவு

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை 72 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 1,582 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தை கையாளுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வாக்குப் பதிவு தொடக்கத்தில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக, பாபநாசம், சீர்காழி ஆகிய பகுதிகளில் 3 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு, வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் வாக்குப் பதிவு காலையிலிருந்து சுமார் 11 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் 9 மணி வரை 19 சதவீதமும், காலை 11 மணி வரை 33 சதவீதமும், பகல் 1 மணி வரை 49 சதவீதமும், பிற்பகல் 3 மணி வரை 60.5 சதவீதமும், பிற்பகல் 5 மணி வரை 72 சதவீதமும் இத்தொகுதியில் வாக்குகள் பதிவாகின.

முழு கட்டுரையைப் படிக்க →