முகப்பு
தற்போதைய செய்திகள்

வீராணம் ஏரி நீர்மட்டம் குறைந்தது: ஏரியை நிரப்ப கீழணையிலிருந்து நீர் திறப்பு

கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 ஆகும். ஆனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வெள்ளிக்கிழமை நிலவரப்ப 42.65 ஆக உள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்க 77 கனஅடி நீர் சென்னை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்கு வசதியாக, நீர்மட்டம் குறைந்து வரும் வீராணம்ஏரிக்கு வெள்ளிக்கிழமை கீழணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 ஆகும். ஆனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வெள்ளிக்கிழமை நிலவரப்ப 42.65 ஆக உள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்க 77 கனஅடி நீர் சென்னை குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 41 அடியாக குறைந்தால் ஏரியிலிருந்து நீரேற்றி சென்னை குடிநீர் வாரியத்திற்கு நீர் அனுப்ப முடியாது. ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் இன்னும் சில தினங்களே சென்னை குடிநீர் வாரியத்திற்கு நீர் அனுப்பலாம் என்ற நிலை உருவானது.

இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் கல்லணையிலிருந்து வியாழக்கிழமை 5035 கனஅடி நீரை திறந்துவிட்டனர். இந்த நீர் வியாழக்கிழமை இரவு கீழணையை வந்தடைந்தது. வெள்ளிக்கிழமை காலை கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம்ஏரிக்கு விநாடிக்கு 1100 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ருத்ரசோலை மதகு வழியாக ஏரிக்குள் நீர் வந்து சேர்ந்தது. இதனால் இரண்டு அல்லது மூன்று தினங்களில் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்கு ஏதுவாக வீராணம்ஏரியில் நீர் நிரப்பப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.