முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஏப்.27 முதல் மே.1 வரை புத்தக கண்காட்சி

புத்தக கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் தொடங்கி வைக்கிறார் வாசவி கிளப் மாவட்ட ஆளுநர் ஆர்.நாகேந்திரன் தலைமை வகிக்கிறார். மே.1-ம் தேதி நூல்கள் வெளியீட்டு விழா

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

சிதம்பரத்தில் வாசவிகிளப், நிவேதிதா பதிப்பகம், அகிலா பதிப்பகம் ஆகியவை இனைந்து மேலவீதி ஸ்ரீவாசவி மஹாலில் ஏப்.27-ம் தேதி முதல் மே.1-ம் தேதி வரை மாபெரும் புத்தக கண்காட்சியை நடத்துகிறது.

புத்தக கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் தொடங்கி வைக்கிறார் வாசவி கிளப் மாவட்ட ஆளுநர் ஆர்.நாகேந்திரன் தலைமை வகிக்கிறார். மே.1-ம் தேதி நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. விழாவில் 15 நூல்கள் வெளியிடப்படுகின்றன. நிகழ்ச்சிக்கு பேராசிரியர் வே.சபாநாயகம் தலைமை வகிக்கிறார். ஓவிய கவிஞர் அமுதோன் முன்னிலை வகிக்கிறார். அ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்கிறார். எழுத்தாளர்கள் பிரபஞ்சன், லேனா தமிழ்வாணன், ஆர்னிகாநாசர், குறிஞ்சிவேலன், கவிஞர் மித்ரா ஆகியோர் பங்கேற்று நூல்களை வெளியிடுகின்றனர்.

மேலும் விழாவில் ஊருணி வாசகர் வட்ட துவங்கப்படுகிறது. கண்காட்சி மற்றும் விழா ஏற்பாடுகளை வாசவி கிளப் நிர்வாகிகள் எஸ்.கோபாலன், ஆர்.மஞ்சுளா, பி.ரவிசங்கர், எஸ்.வரலட்சுமி, ஆர்.வெங்கடாஜலபதி, எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.