முகப்பு
தற்போதைய செய்திகள்

கிணற்றில் இரும்பு கயிறு அறுந்து ஒருவர் பலி

பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி மகன் மகுடீஸ்வரன்(41).  சனிக்கிழமை அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் கர்ணன்(41) என்பவர் மகுடீஸ்வரனை அழைத்துக்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

பழனி அருகே கிணற்றில் இரும்பு கயிறு அறுந்து ஒருவர் பலியானார்.

பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி மகன் மகுடீஸ்வரன்(41).  சனிக்கிழமை அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் கர்ணன்(41) என்பவர் மகுடீஸ்வரனை அழைத்துக் கொண்டு பழைய ஆயக்குடி சட்டப்பாறை ஆலமரத்துசாமி கோயில் அருகே உள்ள பரமசிவம் மகன் ஜோதிமணி(42) என்பவரது தோட்டத்துக்கு கிணற்று வேலைக்கு சென்றுள்ளார்.  கிணற்றின் வெளியே கிரேன் அமைத்து இரும்பு கயிறு மூலம் உள்ளே இறங்கி தூர்வாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது.  அப்போது கிணற்றின் உள்ளே இருந்து இரும்பு கயிறு மூலம் மகுடீஸ்வரன் மேலே வந்த போது சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து காலில் பலத்த காயமடைந்தார்.  உடனடியாக பழனியில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கியும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.