சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் அப்பர் சதய விழா
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தில்லை திருமுறைக்கழகம் மற்றும் தருமைஆதீனம் சார்பில் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு அப்பர் சதயம் விழா மற்றும் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தில்லை திருமுறைக்கழகம் மற்றும் தருமைஆதீனம் சார்பில் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு அப்பர் சதயம் விழா மற்றும் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆண்டு தோறும் தருமை ஆதீனம் சார்பில் சமயக்குரவர்கள் மற்றும் சமயாச்சாரியார்கள் ஆகிய 8 பேருக்கு குருபூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதாவது சமயக்குரவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சமயாச்சாரியார்கள் மெய்கண்டார், அருநந்திசிவம், மறைஞானசம்பந்தம், உமாபதிசிவம் ஆகிய 8 பேருக்கு குருபூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த அப்பர் (திருநாவுக்கரசர்) சதயவிழா வெள்ளிக்கிழமை நடராஜர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கொண்டாடப்பட்டது. பின்னர் ஆயிரங்கால் மண்டப நடனப்பந்தலில் நாவுக்கரசர் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. உ.வெங்கடேச தீட்சிதர் தலைமை வகித்தார். பேராசிரியர் சிதம்பரராஜன் சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தருமைஆதீன மட நிர்வாகி சேதுசுப்பிரமணியன் செய்திருந்தார்.