முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒரே வாரத்தில் மூன்று இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்

தருமபுரி மாவட்டத்தில், பெண் கல்வியறிவு குறைந்த அளவே உள்ளதாலும், பெண்களின் திருமணம் குறித்து அதிக அளவு விழிப்புணர்வு இல்லாததால், மாவட்டத்தில் அதிக அளவு இளம் வயது திருமணங்கள் நடக்கின்றன

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் ஒரே வாரத்தில் மூன்று இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில், பெண் கல்வியறிவு குறைந்த அளவே உள்ளதாலும், பெண்களின் திருமணம் குறித்து அதிக அளவு விழிப்புணர்வு இல்லாததால், மாவட்டத்தில் அதிக அளவு இளம் வயது திருமணங்கள் நடக்கின்றன.இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம், மாவட்ட சமூக நலத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாலக்கோடு, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் 15 வயது, 16 மற்றும் 17 வயது பெண்களுக்கு இளம் வயது திருமணம் செய்ய அவர்களது பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இது குறித்து, சைல்டு லைனுக்கு வந்த புகாரின் அடிப்படையில், வருவாய்த்துறை அதிகாரிகள், சைல்டு லைன் அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் ஆகியோர் இளம் வயது திருமணம் குறித்து பாதிப்புகள் அவர்களின் பெற்றோரிடம் எடுத்துக் கூறி, மூன்று இளம் வயது திருமணங்களையும் தடுத்து நிறுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →