ஆம்னி பேருந்து பெட்ரோல் நிலையத்தில் புகுந்து தனியார் பள்ளி பேருந்து சேதம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஆம்னி பேருந்து பெட்ரோல் நிலையத்தினுள் அதிவேகமாக நுழைந்து அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து மீது மோதியது. இதில் இரு
தற்போதைய செய்திகள்ஆம்னி பேருந்து பெட்ரோல் நிலையத்தில் புகுந்து தனியார் பள்ளி பேருந்து சேதம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஆம்னி பேருந்து பெட்ரோல் நிலையத்தினுள் அதிவேகமாக நுழைந்து அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து மீது மோதியது. இதில் இரு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஆம்னி பேருந்து பெட்ரோல் நிலையத்தினுள் அதிவேகமாக நுழைந்து அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து மீது மோதியது. இதில் இரு பேருந்துகளும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பெட்ரோல், டீசல் நிரப்பும் இயந்திரம் மீது மோததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையிலிருந்து ராஜபாளையம் நோக்கி ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர்-இந்திராநகரை அடுத்துள்ள பாலத்தை கடந்து பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தபோது, ஒருவர் இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராதவிதமாக குறுக்கே வந்துள்ளார். அவரைக் காப்பாற்ற எண்ணி, ஆம்னி பேருந்து டிரைவர் அதிவேகமாக வந்து கொண்டிருந்த பேருந்தை பிரேக் பிடித்து வலப் பக்கம் உள்ள பெட்ரோல் நிலையத்தினுள் திருப்பியுள்ளார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்து மீது ஆம்னி பேருந்து பலத்த சப்தத்துடன் மோதி நின்றது. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இரு பேருந்துகளும் பலத்த சேதம் அடைந்ததன.
பயங்கர சப்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் பெட்ரோல் நிலையத்தில் ஏதோ பாதிப்பு நடைபெற்றுவிட்டது என்று திரண்டனர். அதிர்ஷ்டவசமாக பெட்ரோல், டீசல் நிரப்பும் இயந்திரம் மீது பேருந்து மோதவில்லை. அப்படி சம்பவம் ஏற்பட்டிருந்தால் பலத்த தீ விபத்து ஏற்பட்டு பேருந்தில் இருந்த பலர் உயிரிழந்திருப்பார்கள் என்று போலீஸார் கூறினர்.
இது குறித்து மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (33) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார், ஆம்னி பேருந்து ஓட்டி வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (35) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.