மதுப் பழக்கத்திலிருந்து திருந்தியோர் சுய தொழில் செய்து கொள்ள உதவிகள் வழங்கும் விழா
மதுப் பழக்கத்திலிருந்து திருந்தியவர்கள் சுய தொழில் செய்து கொள்வதற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீவிலில்புத்தூரில் உள்ள சி.எஸ்.ஐ. தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்மதுப் பழக்கத்திலிருந்து திருந்தியோர் சுய தொழில் செய்து கொள்ள உதவிகள் வழங்கும் விழா
மதுப் பழக்கத்திலிருந்து திருந்தியவர்கள் சுய தொழில் செய்து கொள்வதற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீவிலில்புத்தூரில் உள்ள சி.எஸ்.ஐ. தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது.
மதுப் பழக்கத்திலிருந்து திருந்தியவர்கள் சுய தொழில் செய்து கொள்வதற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீவிலில்புத்தூரில் உள்ள சி.எஸ்.ஐ. தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது.
இந்த மையத்தில் சுமார் 300 ஆதரவற்ற மாணவர்கள் உள்ளார்கள். இவர்கள் 3 வயது முதல் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. மேலும் இவர்களின் பெற்றோர்களுக்கும் பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களின் பெற்றோரில் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தவர்கள், அதிலிருந்து திருந்தி மறுவாழ்வு பெற்று வாழ்வில் சிறந்து விளங்க உறுதி கொண்டோருக்கு, சுய தொழில் செய்து கொள்வதற்காக உதவிகள் வழங்கப்பட்டது.
சி.எஸ்.ஐ. மதுரை-முகவை திருமண்டலத்தின் அனைத்து விடுகளின் இயக்குநர் சாலமோன் இந்த உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இவர்களுக்கு நடமாடும் பழக்கடை, தையல் இயந்திரம், பல்வகை சமையல் பாத்திரங்கள், டைல்ஸ் அறுப்பதற்கான இயந்திரம், தள்ளுவண்டியுடன் கூடிய தண்ணீர் டிரம்கள் என பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.
வளர்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கு.ராக்லண்ட் நிக்கோலஸ், கே.என்.எச். விடுதி தாளாளர் ஜே.ஜார்ஜ், மையத்தின் சமூக நல ஊழியர்கள் ஜெபராஜ், வசந்தி, பிரேம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் மையத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
மையத்தின் ஊழியர் கிருபாகரன் நன்றி கூறினார்.