முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் பிஎஸ்சி (வேளாண்) வகுப்புகள் ஆக.6-ல் தொடக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கு 11,647 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதி பெற்ற மாணவர்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:04 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்டு 6-ம் தேதி புதன்கிழமை தொடங்கப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கு 11,647 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதி பெற்ற மாணவர்கள் 11,002 பேர் ஆவார்கள். ஆக.14,15,16 தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வில் 2014-15 கல்வி ஆண்டில் பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் பேரும், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 70 பேரும் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்.

அனுமதி சேர்க்கை பெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் புதன்கிழமை காலை 9 மணிக்கு  நடைபெறுகிறது. தமிழகஅரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா வகுப்புகளை தொடங்கி வைத்துப் பேசுகிறார். விழாவில் பதிவாளர் என்.பஞ்சநதம், வேளாண்புல முதல்வர் ஜெ.வசந்தகுமார், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.

வகுப்புகள் தொடங்கப்படும் விபரம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்ட படிப்புகளுக்கான வகுப்புகள் (5 year Integrated Courses) ஆக.13-ம் தேதி அன்றும், இரண்டாண்டு முதுநிலை பட்ட படிப்புகளுக்கான வகுப்புகள் ஆக.18-ம் தேதி அன்றும் தொடங்கப்படவுள்ளன என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.