கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடி செலவில் கதவணை: காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வரவேற்பு
கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கதவணை அமைத்து, நீரை பாசனத்திற்கும், குடிநீருக்கும் திருப்பிவிடும் திட்டத்தை தமிழக
கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கதவணை அமைத்து, நீரை பாசனத்திற்கும், குடிநீருக்கும் திருப்பிவிடும் திட்டத்தை தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத்தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் அறிவித்துள்ள திட்டம் கடலூர், நாகை மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்றம் தரக்கூடிய மிகப்பெரிய திட்டம். இதை இரண்டு மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகளும் வரவேற்கிறோம். இந்த திட்டம் 1990-ம் ஆண்டு தீட்டப்பட்டது. ஏதோ பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்டுவிட்டது. இந்த திட்டம் தற்போது தொடங்கப்படுவதால், சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக 20 தினங்களுக்கு பாசன வசதி பெறும். மேலும் கடலில் வீணாகும் உபரிநீர் ஒரளவிற்கு சேமிக்கப்படும். கொள்ளிடத்தின் இருகரைகளிலும் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி கணிசமாக உயரும், இதன் காரணமாக பம்பு செட் மூலம் கூடுதலாக ஒரு போகம் சாகுபடி செய்ய முடியும். இத்திட்டத்தை மிகவிரைவில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர். தமிழக முதல்வர் அறிவித்த இந்த திட்டத்தால் சுமார் 2 டிஎம்சி நீர் தேக்கமுடியும் என்கிறார் கே.வி.கண்ணன்பிள்ளை.