முதல்வர் அறிவிப்பு: சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வெடி, வெடித்து கொண்டாட்டம்
கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கொள்ளிடம் ஆற்றின் வடிநீரை பாசனத்திற்கு, குடிநீருக்கும் திருப்பிவிடும் திட்டத்தை தமிழக
கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கொள்ளிடம் ஆற்றின் வடிநீரை பாசனத்திற்கு, குடிநீருக்கும் திருப்பிவிடும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையினை ஏற்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சிதம்பரத்தில் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் மேலவீதி, தெற்குவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடி, வெடித்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டி, ஆற்று நீரை, கான்சாகிப்வாய்காலில் திருப்பி விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் முன்னிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஜீலை 2-ந் தேதி பொன்னந்திட்டு-சிதம்பரம் வரை 25 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு சிதம்பரம் உதவிஆட்சியரிடம் மனு அளித்தனர். கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, தமிழக முதல்வரிடமும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.