முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமா கோயில் முன்பு இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரை வெளியாகியுள்ளதற்க்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:05 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமா கோயில் முன்பு இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரை வெளியாகியுள்ளதற்க்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலைக்கழக ஊழியர்கள்-மாணவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பேராசிரியர் எஸ்.தமிழரசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பி.செந்தில்குமார் வரவேற்றார். முனைவர் ஜி.குமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் டாக்டர் ஆறு.அன்பரசன், ஏ.ஜி.மனோகரன், சிம்மக்குரல் சேகர், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தேஜா ராஜா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.