முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே அண்ணன் மனைவியை கொலை செய்து, தம்பி தற்கொலை!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடஹரிராஜபுரத்தைச் சேர்ந்த சந்திரகாசி மக்ன் கோதண்டபாணி (39), விஜயகுமார் (32). இருவரும் குவைத்தில் வேலைபார்த்து வருகினறனர். சில மாதங்கள் முன்பு ஒன்றன்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:05 AM
பகிர்:

சிதம்பரம் அருகே அண்ணன் மனைவியை கொலை செய்துவிட்டு, தம்பி தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடஹரிராஜபுரத்தைச் சேர்ந்த சந்திரகாசி மக்ன் கோதண்டபாணி (39), விஜயகுமார் (32). இருவரும் குவைத்தில் வேலைபார்த்து வருகினறனர். சில மாதங்கள் முன்பு ஒன்றன், பின் ஒன்றாக இருவரும் சொந்த ஊரான வடஹரிராஜபுரத்திற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை அண்ணன், தம்பி இருவரும் வீட்டின் வெளியே மதுகுடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அண்ணன் மனைவி ராஜலட்சுமி (30) கணவரை உள்ளே வருமாறு அழைத்துள்ளார். சிறுது நேரம் கழுத்து வருவதாக கோதண்டாபாணி தெரிவித்துள்ளார். அப்போது தம்பி விஜயகுமாருக்கும், அண்ணி ராஜலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் அருகே இருந்து மண் அள்ளும் சவுலால் ராஜலட்சுமியை தாக்கியுள்ளார். இதில் ராஜலட்சுமி தலைமையில் பலத்த காயமுற்று ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனடியாக அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜலட்சுமி இறந்தார்.

இதனை கேள்விப்பட்ட தம்பி விஜயகுமார் ஊரில் ஆற்றங்கரையோரம் உள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த போன ராஜலட்சுமிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தூக்குப் போட்டுக் கொண்ட தம்பி விஜயகுமாருக்கு கடந்த ஆக.4-ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஒரத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.