முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே காதலி மற்றும் அவரது சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய காதலன்

சிதம்பரம் அருகே தன்னை சந்திக்க தவிர்த்து வந்த காதலியையும், அதனை தடுத்த சித்தப்பாவை காதலன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் இருவரும் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:05 AM
பகிர்:

சிதம்பரம் அருகே தன்னை சந்திக்க தவிர்த்து வந்த காதலியையும், அதனை தடுத்த சித்தப்பாவை காதலன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் இருவரும் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு மேலத்தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (26). இவர் அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புலத்தில் உள்ள புல்பண்ணையில் புல்வெட்டும் தினக்கூலியாக வேலை பார்க்கிறார். இந்நிலையில் அதே மேலத்தெருவில் வசிக்கும் ஆனந்தராஜ் என்பவரது வீட்டில் தங்கியுள்ள தெற்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மகள் சுபஸ்ரீ (26)-ம், ஸ்ரீகாந்தும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சமீப காலமாக சுபஸ்ரீ, ஸ்ரீகாந்தை பார்த்து பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் புதன்கிழமை இரவு மதுபோதையில் ஆனந்தராஜ் வீட்டிற்கு சென்று ஏன் என்னிடம் பேசமாட்டேன் என்கிறாய் எனக்கூறி ஆத்திரத்தில் சுபஸ்ரீயை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அதனை சித்தப்பா ஆனந்தராஜ் தடுத்த போது அவரையும் வெட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதில் சுபஸ்ரீ கழுத்து, கை மணிக்கட்டு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் வெட்டு விழுந்து படுகாயமுற்றார். ஆனந்தராஜிற்கு கழுத்து, முதுகு பகுதியில் வெட்டு விழுந்து படுகாயமுற்றார். இருவரும் கவைலக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.