வியட்நாமில் நடைபெற்ற அகில உலக வேதியியல் ஓலிம்பியாட்டில் இந்திய மாணவர்கள் சாதனை
இந்தியாவில் மத்தியஅரசு நிதி உதவியுடன் மும்பை ஹோமிபாபா விஞ்ஞானக்கல்வி மையம், வேதியியல்துறை விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அகில அளவிலான
வியட்நாமில் நடைபெற்ற அகில உலக வேதியியல் ஒலிம்பியாட்டில் இந்திய மாணவர்கள் நான்கு பேர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவில் மத்தியஅரசு நிதி உதவியுடன் மும்பை ஹோமிபாபா விஞ்ஞானக்கல்வி மையம், வேதியியல்துறை விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அகில அளவிலான விஞ்ஞான நுழைவுத்தேர்விற்காக இந்தியாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறை கெளரவப் பேராசிரியர் எம்.சுவாமிநாதன், மும்பை பல்கலைக்கழக பேராசிரியர் சாத்தே, கெளகாத்தி பல்கலைக்கழக பேராசிரியர் பிரதீப் புக்கான், மும்பை ஹோமிபாபா விஞ்ஞானக்கல்வி மைய விஞ்ஞானி இந்திராணிசென் ஆகியோர் பயிற்சிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இப்பயிற்சி குழுவினர் தேசிய அளவில் நடைபெற்ற விஞ்ஞான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற 35 ஆயிரம் மாணவர்களில் நான்கு நிலைகளில் நடைபெற்ற தேர்வு முகாமில் இந்தியாவிலிருந்து நான்கு மாணவர்களை தேர்வு செய்து வியட்நாமில் ஜூலை 20-29ல் நடைபெற்ற அகில உலக வேதியியல் ஒலிம்பியாடுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நான்கு மாணவர்களும் பதக்கங்களை வென்றனர்.
சென்னை மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவர் அனிக்கட்முரேகர், சண்டிகர் எஸ்ஜிஜிஎஸ் பள்ளி மாணவர் சுபம்ரோயல் ஆகியோர் வெள்ளி பதக்கங்களும், உதய்பூர் எம்டிஎஸ் பள்ளி மாணவர் குசால்பாபுல், ராஞ்சி புனித தாமஸ் பள்ளி மாணவர் ஆதித்யகுமார் ஆகியோர் இருநிலை தேர்வுகளில் வெற்றி பெற்று வெண்கல பதக்கங்களும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியை வியட்நாமின் ஹனாய் விஞ்ஞான பல்கலைக்கழகம் இந்த போட்டியை நடத்தியது. இப்போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மணி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, கொரியா, பாகிஸ்தான், டென்மார்க், ஜப்பான் உள்ளிட்ட 77 நாடுகள் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டிலிருந்து 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றனர். இதில் எங்கள் குழுவில் இடம் பெற்ற இந்திய மாணவர்கள் பதக்கங்களை வென்றது பெருமையாக உள்ளது என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக கெளரவப் பேராசிரியர் எம்.சுவாமிநாதன்.