தற்போதைய செய்திகள்

கூட்டுக் குடிநீர் திட்டத்தை மேம்படுத்த தமிழக முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மேம்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தினமணி

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மேம்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையில்,

1. தேனி மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சி மற்றும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 60 ஊரகக் குடியிருப்புகளுக்கு, வைகை அணையினை நீர் ஆதாரமாகக் கொண்டு 72,945 மக்கள் பயன்பெறும் வகையில் 20 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, கண்டனூர், நாட்டரசன்கோட்டை, கோட்டையூர், புதுவயல், கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் ஆகிய 8 பேரூராட்சிகள் மற்றும் 2,297 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவேரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு, 5 லட்சத்து 7 ஆயிரத்து 775 மக்கள் பயன்பெறும் வகையில் 1,160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சி மற்றும் 319 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், பத்மநாபபுரம் மற்றும் காட்டாத்துறை கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பொதுவான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள  9 ஊராட்சிகளைச் சார்ந்த 185 ஊரகக் குடியிருப்புகளுக்கு பவானி ஆற்றினை, நீர் ஆதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மற்றும் நம்பியூர் ஒன்றியங்கள், காரப்பாடி மற்றும் 5 ஊராட்சிகளைச் சார்ந்த 88 ஊரகக் குடியிருப்புகளுக்கு பவானி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு 18,731 மக்கள் பயன்பெறும் வகையில் 11 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி, திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி நகராட்சிகளிலுள்ள 2 லட்சத்து 81 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், 267 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். ஆக மொத்தம், 6 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 1,672 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. இதே போன்று, பேரூராட்சிகளுக்கு என காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் மற்றும் கருங்குழி பேரூராட்சிகளுக்கு 11 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 47,502 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள், திருச்சி மாவட்டம் கல்லக்குடி, புள்ளம்பாடி மற்றும் முசிறி பேரூராட்சிகளுக்கு 15 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 57,800 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள், நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் பொத்தனூர் பேரூராட்சிகளுக்கு 7 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 35,600 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள், கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு 2 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12,020 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சிகளுக்கு 16 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 49,000 மக்கள் பயன்பெறும் வகையிலான குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், என மொத்தம் 53 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT