முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் திருப்பாற்கடல் தீர்த்தகுள மேற்குகரை ஆக்கிரமிப்பு அகற்றம்

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியது திருப்பாற்கடல் குளம் என வரலாறு கூறுகிறது. இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:07 AM
பகிர்:

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள ஸ்ரீநடராஜர் கோயில் தீர்த்தகுளத்தின் மேற்கரையில் இருந்த ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பாளாராலேயே ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது.

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியது திருப்பாற்கடல் குளம் என வரலாறு கூறுகிறது. இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் இருந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் இந்த ஆண்டு மீட்கப்பட்ட பகுதி மட்டும் சுத்தம் செய்யப்பட்டு நீர்விடப்பட்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜப் பெருமானின் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.

வேங்கான்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்த குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் குளத்தில் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ளது. தற்போது கோயில் குளம் முற்றிலுமாக ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் தூர்வாரப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குளத்தின் மேற்குகரை பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்ததால், சுவாமி சுற்றிவர இயலாது என தலைவர் மு.செங்குட்டுவன் தலைமையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் உதவிஆட்சிரிடம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரி மனு அளித்தனர்.

அதன் பேரில் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், வருவாய்த்துறையினர் மூலம் அளந்து ஆய்வு செய்து கடந்த 27-7-2014 அன்று சர்வே எண் 216ல் திருப்பாற்கடல் குளத்தின் மேற்குகரையில் உள்ள 1.1 மீட்ட அகலமும், 20.3 மீட்டர் நீளமும் உள்ள ஆக்கிரமிப்பை ஆக.3-ம் தேதிக்குள் அதன் உரிமையாளர் முத்துசாரங்கன் அகற்றிக் கொள்ள வேண்டும் அல்லது ஆக.4-ம் தேதி உதவிஆட்சியர் முன்பு ஆஜராகி விளக்கம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் உரிமையாளர் ஆக.4-ம் தேதி உதவிஆட்சியர் முன்பு ஆஜராகி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், காலக்கெடு வேண்டும் என கோரி அனுமதி பெற்றார்.

இந்நிலையில் ரிட் மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆக.5-ம் தேதி நீதிபதி பால்வசந்தகுமார் தலைமையிலான பெஞ்சு நீதிபதிகள், உரிமையாளர் முத்துசாரங்கள் ஆக.12-ம் தேதிக்குள் உதவிஆட்சியர் முன்பு ஆஜராகி தனது நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். உதவிஆட்சியர் சட்டப்படி ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவித்து ரிட் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உரிமையாளர் முத்துசாரங்கள் மேற்கண்ட திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தின் மேற்குகரையில் உள்ள ஆக்கிரமிப்பை ஞாயிற்றுக்கிழமை தானே அகற்றும் பணியை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.