திட்டக்குடி மாணவிகள் பாலியல் வழக்கு: அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 16 பேர் மீது குண்டர் சட்டம்
திட்டக்குடி மாணவிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யும் பணியில் கடலூர் மாவட்ட
திட்டக்குடி மாணவிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யும் பணியில் கடலூர் மாவட்ட காவல்துறையினர் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 2 மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பலருக்கு விருந்தாக்கப்பட்டதாக வெளியான தகவல் மாவட்டத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா உத்தரவின்பேரில் 4 தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த வழக்கில் வடலூர் சதிஷ்குமார், அவரது மனைவி தமிழ்செல்வி உள்பட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் திட்டக்குடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரும், அவரது கார் டிரைவரும் இவ்வழக்கில் போலீஸார் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் அதிமுக பிரமுகர் மாணவிகளை தனது இச்சைக்கு பயன்படுத்தி உள்ளதும், அவரது கார் டிரைவர் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தபோது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்தார். இதையடுத்து திட்டக்குடி பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைதான 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்காக எஸ்பி ராதிகா, டிஎஸ்பி கருணாநிதி ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை நடத்தப்பட்டு வரும் அதிமுக பிரமுகர், அவரது கார் டிரைவரும் குண்டர் சட்டத்தில் விரைவில் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.