எபோலோ வைரஸ் நோயிற்கு ஹோமியோபதி மருந்து உள்ளது: சிதம்பரம் மருத்துவர் தகவல்
1976 முதல் 1986 வரை தென்ஆப்பிரிக்கா நாட்டில் பல பேர் 6 கண்கள் உடய சிலந்தி கடித்தவுடன் உடலில் ஜூரம், தலைவலி, போன்றவைகள் ஏற்பட்டு 6 அல்லது 7 நாட்களில் உடல் உறுப்புகளில் இருந்து ரத்தம்
கொடிய வைரஸ் நோயான எபோலோ வைரஸ் நோயிற்கு ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளது என சிதம்பரத்தைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் வை.லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் வை.லட்சுமிநாராயணன் தெரிவித்தது:
தென்னாப்பிரிகாவில் உருவாகிய நோய்:
1976 முதல் 1986 வரை தென்ஆப்பிரிக்கா நாட்டில் பல பேர் 6 கண்கள் உடய சிலந்தி கடித்தவுடன் உடலில் ஜூரம், தலைவலி, போன்றவைகள் ஏற்பட்டு 6 அல்லது 7 நாட்களில் உடல் உறுப்புகளில் இருந்து ரத்தம் வடிந்து மரணம் ஏற்பட்டது. இதனை கார்நெல்டா ரிச்சர்ட்சன் என்ற மருத்துவர் ஆராய்ந்து இந்த சிலந்தி பூச்சி கடியினால் மனித உடலில் எபோலோ என்ற வைரஸ் உருவாகி மனித உயிரை போக்குகிறது என கண்டுபிடித்தார்.
ஹோமியோபதியில் மருந்துகள்: இதற்கு பல ஆய்வுகள் செய்யப்பட்டு, 1990-ல் ஹோமியோபதி மருந்தின் மூலம் இந்த வைரஸ் நோய் தாக்கம் குறைக்கப்பட்டு உயிரிழப்பை தடுக்கலாம் என 1999ல் பிரிட்டிஷ் ஹோமியோபதி அமைப்பு உலகிற்கு எடுத்துரைத்தது. ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகளை தடுப்பு மருந்தாகவும், வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்பதை உலகில் உள்ள பல ஹோமியோபதி மருத்துவமேதைகள் எடுத்துரைத்துள்ளார்கள்.
நோய்க்கான அறிகுறிகள்: இந்த கொடிய எபோலோ வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டால் ஜூரம், தாங்க முடியாத தலைவலி, மூட்டுகள் தசைகள் வலி, உடல் குணிர்ந்து போதல், தாங்க முடியாத சோர்வு, கண்கள் அதிகமாக சிவத்தல், வாந்தி வயிற்று போக்கு, வயிற்றுவலி, நோய் முந்திய நிலையில் உடல் உறுப்புகளிலிருந்து கண், காது, வாய், மூக்கு, மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறும். மேலே குறிப்பிட்ட உபாதைகளை கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் கீழ்கண்ட மருந்துகளை பயன்படுத்தலாம் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோய்க்கான் மருத்துகள் பெயர்: CROTALUS HORRIDUS 30 C, BOTHRO PS 30 c, LACHE SIS MUTUS 30 c, MERCURIUS CORROSIVUS 30 c, SECALE CORNUTUM 30c, ECHINACEA 30 c. மேற்கண்ட மருந்துகளை அனுபவம் வாய்ந்த ஹோமியோபதி மருத்துவர் மூலம் பெற்று பயன்படுத்தலாம் என்கிறார் மருத்துவர் வை.லட்சுமிநாராயணன்.