மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து சிதம்பரத்தில் தெருமுனைக் கூட்டம்
மத்தியஅரசுப் பள்ளிகளில் “சமஸ்கிருத வாரம்” கொண்டாடும் அரசின் முடிவுக்கு எதிராக சிதம்பரத்தில் தமிழ்க் காப்பணி அமைப்பு சார்பில் கண்டனதம் தெரிவித்து தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்தியஅரசுப் பள்ளிகளில் “சமஸ்கிருத வாரம்” கொண்டாடும் அரசின் முடிவுக்கு எதிராக சிதம்பரத்தில் தமிழ்க் காப்பணி அமைப்பு சார்பில் கண்டனதம் தெரிவித்து தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் மேலவீதி அண்ணாசிலை அருகே நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தமிழக் காப்பணி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்துப் பேசினார். தமிழக இளைஞர் முன்னணி தமிழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன் வரவேற்றுப் பேசினார்.
தமிழ்க் காப்பணித் தலைவர் பேராசிரியர் அழ.பழநியப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பு செயலாளர் வே.சுப்ரமணிய சிவா, சிதம்பரம் அயோத்திதாசப் பண்டிதர் - சுவாமி சகஜாநந்தா ஆய்வு மைய நிர்வாகி பேராசிரியர் திரு.அ.அன்பாநந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் தமிழ் வழித் திருமண நெறியாளர் இறைநெறி இமயவன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மத்தியஅரசின் சமஸ்ருதத் திணிப்பைக் கண்டித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பொதுமக்கள், தமிழ் உணர்வாளர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் மு.சம்பந்தம் நன்றி கூறினார்.