தற்போதைய செய்திகள்

தின்பண்டம் தருவதாகக் கூறி பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., கைது

விளாத்திகுளம் அருகே குமாரசக்கனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் போலீஸில் அளித்த புகாரில்,

மூர்த்தி

விளாத்திகுளம் அருகே குமாரசக்கனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் போலீஸில் அளித்த புகாரில், வேம்பாறு கிராமத்தில் 7ம் வகுப்பு பயிலும் தனது மகளை அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் லட்சுமணன்(62) என்பவர், பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை செய்த போலீஸார், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான லட்சுமணனை கைது செய்தனர்.

வீட்டில் இருந்து பள்ளிக்கு 10 கி.மீ. தொலைவு இருப்பதால், மாணவிகள் பள்ளிக்கு பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறிச் சென்று வருவார்களாம். அப்போது, லட்சுமணன் தின்பண்டங்கள் வாங்கித் தருவாராம். அதுபோல் இந்தச் சிறுமிக்கும் தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்துள்ளார். ஒரு நாள், தன் வீட்டுக்கு வரச் சொல்லி இந்தச் சிறுமியிடம், தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் இது குறித்து அந்தச் சிறுமி தன் தந்தையிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து முதியவர் லட்சுமணன் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

SCROLL FOR NEXT