தற்போதைய செய்திகள்

தன் காதலை ஏற்க மறுத்து வேறு திருமணம் செய்தவரை கத்தியால் குத்திய பெண் கைது

ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டம் ஜக்கையாப்பேட்டையைச் சேர்ந்த ராமு(26) என்பவர், அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். வேலைக்குச் செல்லும் வழியில், பங்காருப்பேட்டையச் சேர்ந்த ரமணம்மா(24) என்பவர்

சி. சுரேஷ்குமார்

ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டம் ஜக்கையாப்பேட்டையைச் சேர்ந்த ராமு(26) என்பவர், அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். வேலைக்குச் செல்லும் வழியில், பங்காருப்பேட்டையச் சேர்ந்த ரமணம்மா(24) என்பவர் அவருக்கு அறிமுகமானார். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வராம். ஒருநாள் திடீரென ராமுவிடம் தான் அவரைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார் ரமணம்மா. ஆனால், தன் அத்தை மகளை தான் திருமணம் செய்யவிருப்பதாகவும், தான் ரமணம்மாவைக் காதலிக்கவில்லை என்றும் ராமு கூறியுள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த ரமணம்மா, தொடர்ந்து பலமுறை ராமுவை தன்னைக் காதலிக்குமாறும் திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ராமுவுக்கும் அவரது அத்தை மகளுக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இதை  அறிந்த ரமணம்மா கோபம் கொண்டாராம்.  ராமுவை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்காததால், அவரை உறவினர் மூலம் ஏமாற்றி ஓர் இடத்துக்கு வரச் செய்துள்ளார். அங்கே அவருடன் தகராறில் ஈடுபட்ட ரமணம்மா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராமுவைக் குத்தி காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டாராம்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமுவை அருகில் இருந்தோர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமுவின் புகாரின் பேரில் ஜக்கையாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, ரமணம்மாவைக் கைது செய்தனர்.

ராமு மீதான காதலை மறக்க முடியாததால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக ரமணம்மா போலீஸாரிடம் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT