ஒகேனக்கல் நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைவு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் வெள்ளிக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 6 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் வெள்ளிக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 6 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புதன்கிழமை நீர்வரத்து நொடிக்கு 9 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமையும் நீர்வரத்து நொடிக்கு 9 ஆயிரம் கன அடியாகவே இருந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அருவிக்கு வரும் நீர் வரத்து மேலும் குறைந்து நொடிக்கு 6 ஆயிரம் கன அடியாக வந்துக்கொண்டிருக்கிறது.