வத்திராயிருப்பு வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு வட்டார விவசாயிகளுக்கு மதுரை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவ மாணவிகள் 3 மாத காலம் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பகுதிக்கேற்ற வேளாண்மை சாகுபடி முறைகள் மற்றும் நவீன சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறார்கள்.
தற்போதைய செய்திகள்வத்திராயிருப்பு வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு வட்டார விவசாயிகளுக்கு மதுரை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவ மாணவிகள் 3 மாத காலம் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பகுதிக்கேற்ற வேளாண்மை சாகுபடி முறைகள் மற்றும் நவீன சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு வட்டார விவசாயிகளுக்கு மதுரை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவ மாணவிகள் 3 மாத காலம் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பகுதிக்கேற்ற வேளாண்மை சாகுபடி முறைகள் மற்றும் நவீன சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறார்கள்.
இக் கல்லூரியின் மாணவிகள் அபிராமி, மணிமேகலை, இந்துமதி, பிரியங்கா, வளர்மதி, விமல்ராணி, விஜயலட்சுமி, ஷீனா ஐசக் ஆகியோர் அடங்கிய குழுவினர் இப் பயிற்சியை அளிக்கிறார்கள்.சேதுநாராயணபுரத்தில் முன்னோடி விவசாயி குருசாமி முன்னிலையில், மாணவிகள் விஜயலட்சுமி, பிரியங்கா ஆகியோர் இப் பயிற்சியை அளித்தனர்.இலந்தைக்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசபாண்டியன் தலைமையில், விவசாயி கருணாகரன் முன்னிலையில் இப் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை மாணவி மணிமேகலை தலைமையில் உள்ள குழுவினர் அளித்தனர்.நத்தம்பட்டி கிராமத்தில் முன்னோடி விவசாயி ராஜையா முன்னிலையில், மாணவி ஷீனா ஐசக் இப் பயிற்சியை விவசாயிகளுக்கு அளித்தார்.பயிற்சியில் தொழில்நுட்ப வேளாண்மை முறைகளான திருந்திய நெல் சாகுபடி, தென்னையில் ஏற்படும் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும், குதிரைவாலி உள்ளிட்ட அரிய வகை தானியப் பயிர்களுக்கான சாகுபடி முறை, நடவு முறையில் துவரைப் பயிர் சாகுபடி முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது.மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு மாணவிகள் விளக்கம் அளித்தனர். பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.