முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே விலையில்லா பொருட்கள் வழங்கக் கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

திருநெல்வேலி அருகே விலையில்லாப் பொருட்கள் பெற டோக்கன் வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:36 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே விலையில்லாப் பொருட்கள் பெற டோக்கன் வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் முதல், 2, 3 ஆவது வார்டுகளில் விலையில்லா பொருட்கள் மிக்சி, கிரைண்டர் மின்விசிறி ஆகியன வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டது. முதல் வார்டுக்கு 4,000 ம், 2, 3 ஆவது வார்டுகளுக்கு தலா 3,500 ம் உள்பட 11 ஆயிரம் விலையில்லா பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மாநகராட்சி 2 ஆவது வார்டில் தேர்வு செய்யப்ப்டட பயனாளிகளுக்கு ரேசன் கடையில் டோக்கன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தங்களுக்கும் விலையில்லா பொருட்கள் பெற டோக்கன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல், 3 ஆவது வார்டு பகுதி பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி தச்சநல்லூர் புறவழிச்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசிய மண்டலக்குழுத் தலைவர் கி. மாதவராமானுஜம், தச்சநல்லூரில் முதல், 2, 3 ஆவது வார்டுகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →