முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையம் அருகே விஷம் குடித்து சகோதரிகள் தற்கொலை

கடையம் கற்பகவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சூசான் மகள் ராமலட்சுமி (24). இதே தெருவை சேர்ந்தவர் சூசானின் சகோதரர் முருகன் மகள் முத்து (13). முருகன் தனது மகள் முத்துவிடம், ராமலட்சுமியுடன்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:37 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து சகோதரிகள் வெள்ளிக்கிழமை குருனை மருந்தினை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கடையம் கற்பகவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சூசான் மகள் ராமலட்சுமி (24). இதே தெருவை சேர்ந்தவர் சூசானின் சகோதரர் முருகன் மகள் முத்து (13). முருகன் தனது மகள் முத்துவிடம், ராமலட்சுமியுடன் பேசக் கூடாது, நட்பு வைத்து கொள்ளக் கூடாது என கண்டித்தாராம். இதில் மனமுடைந்த ராமலட்சுமி, முத்துவும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டை விட்டு வெளியேறினர். குருனை மருந்தினை குளிர்பானத்தில் கலந்து குடித்த இருவரும் ஆழ்வார்குறிச்சி சிவசைலம் அருகில் கடனாநதி கரையில் இறந்து கிடந்தனர்.

ஆழ்வார்குறிச்சி போலீஸார் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →