முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்து மக்கள் கட்சி வினாயகர் ஊர்வலம்: இஸ்லாமியர்கள் வாழ்த்து

பழனியில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழனி, நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் இந்து அமைப்புக்கள் சார்பில் நூற்றுக்கணக்கில் வினாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.  வினாயகர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

பழனியில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி வினாயகர் சார்பில் நடைபெற்ற வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இஸ்லாமிய பெருமக்கள் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

பழனியில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழனி, நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் இந்து அமைப்புக்கள் சார்பில் நூற்றுக்கணக்கில் வினாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.  வினாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்வது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இந்து மக்கள் கட்சி சார்பில் வினாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதை முன்னிட்டு பழனி அடிவாரம் பாதவினாயகர் கோவிலில் துவங்கிய விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணைத் தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். 

திருப்பூர் ஸ்ரீலட்சுமி நாராயண பீடம் மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயல் தலைவர் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம்பிரபு, மாவட்ட துணைத் தலைவர் மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் கோபிநாத், மாவட்ட மாணவரணி தலைவர் சுரேந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றிய தலைவர் சண்முகம் நன்றியுரை வழங்கினார். வினாயகர் சிலைகள் சன்னதி ரோடு, பாளையம், பேருந்து நிலையம், கடைவீதி வழியாக கொண்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சண்முகநதி ஆற்றில் கரைக்கப்பட்டது.

ஊர்வலம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகே வந்த போது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக பழனி டவுன் முஸ்லிம் தர்மபரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கோட்டை அமீர் ஷாகுல் அமீது தலைமையில், சவுகத்அலி, அன்சாரி உள்ளிட்டோர் வந்திருந்து ஊர்வலத்துக்கு வரவேற்பு கொடுத்து, சால்வை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.  ஊர்வலத்துக்கு டிஎஸ்பி., சண்முகராஜன் தலைமையில் 75க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு வழங்கினர். நாளை(திங்கள்கிழமை) இந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிஷத் சார்பிலும், நாளை (செவ்வாய்க்கிழமை) சிவசேனா சார்பிலும் ஊர்வலம் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.